திடீரென பெய்த மழை... அரையிறுதி போட்டி பாதியில் நிறுத்தம்

 
match rain

தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான உலக கோப்பை அரையிறுதி போட்டி மழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. 

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. நடந்து முடிந்த லீக் போட்டி முடிவுகளின் படி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்தை பிடித்த இந்தியா முதல் அணியாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தது. இதேபோல் இரண்டாவது இடத்தில் உள்ள தென் ஆப்ரிக்கா, மூன்றாவது இடத்தில் உள்ள ஆஸ்திரேலியா மற்றும் 4வது இடத்தை பிடித்த நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்தன. நேற்று முதல் அரையிறுதி போட்டி மும்பையில் நடைபெற்றது. இதில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் பலப்ப்ரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

SA vs AUS

இந்த நிலையில், கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்கா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டெம்பா பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார்.  இதனையடுத்து தென்னாப்பிரிக்க அணி முதலாவதாக பேட்டிங் செய்தது. இந்த நிலையில், தென் ஆப்ரிக்கா, ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியில் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தென்னாப்பிரிக்க அணி 14 ஓவர்கள் முடிவில் 44 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வந்தது. இந்த நிலையில் திடீரென மழை குறுக்கிட்டதால் போட்டி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.