நெதர்லாந்தை எளிதில் வீழ்த்திய இந்திய அணி! ஒன்பது லீக் போட்டியிலும் வென்று அசத்தல்!

 
INDvsNED

நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி லீக் ஆட்டத்தில் இந்தியா மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதின.

Image

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். துவக்க ஆட்டக்காரரான கில் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மற்றொரு துவக்காட்டக்காரர் ரோஹித் சர்மா 61ரன்னிலும்,கோலி 51 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு ஸ்ரேயாஸ் அய்யர் மற்றும் கே.எல் ராகுல் ஆகியோர் ஜோடி சேர்ந்தனர். அதிரடியாக ஆடிய இருவரும் சதம் அடித்தனர்.ஸ்ரேயாஸ் அய்யர் 128 ரன்களும்,கே.எல் ராகுல் 102 ரன்களும் எடுத்தனர்.50 ஓவர் முடிவில் இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 410 ரன்களை எடுத்தது.

411 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய நெதர்லாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தன. தேஜா நிடமன்று மட்டும் தாக்குபிடித்து அரை சதம் அடித்து 54 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் பும்ரா,சிராஜ்,ஜடேஜா குல்தீப் யாதவ் ஆகியோர் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினர். இந்த போட்டியில் நான்கு பகுதி நேர பந்துவீச்சாளர்களை ரோகித் சர்மா பயன்படுத்தினார். இந்திய அணியின் இருந்து 9 பந்துவீச்சாளர்கள் இன்று பந்துவீசினர்.47.5 ஓவர் முடிவில் நெதர்லாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 250 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Image

லீக் போட்டி முடிவில் இந்திய அணி தான் விளையாடிய ஒன்பது போட்டிகளையும் வெற்றி பெற்று புள்ளி பட்டியல் முதல் இடத்துடன் உள்ளது.வரும் புதன்கிழமை நடைபெறும் அரைஇறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது.