பும்ரா அபார ஆட்டம்- ஆப்கானிஸ்தானை எளிதில் வீழ்த்திய இந்தியா

 
இந்தியா

டி20 உலகக் கோப்பையில் சூப்பர் 8 சுற்று ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இன்றைய ஆட்டத்தில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. 

இந்தியா

டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு அதிர்ச்சியாக ரோகித் 8 ரன்னிலும் , கோலி 24 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதிரடியாக ஆடிய ரிசப் பண்ட் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். சிறப்பாக ஆடிய சூர்யகுமார் யாதவ் 28 பந்துகளில் 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இறுதிக் கட்டத்தில் ஹர்திக் பாண்டியா தன் பங்கு 32 ரன்களை சேர்த்தார்.20 ஓவர் முடிவில் இந்திய அணி 8 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்களை எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணி தரப்பில் ரசித் கான் மற்றும் பஃரூக்கி ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை கைப்பற்றினார்.

இந்

182 என்ற இலக்கை துரத்திய ஆப்கானிஸ்தான் அணிக்கு ஆரம்பத்திலேயே விக்கெட்களை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார் பும்ரா. அதிரடி ஆட்டக்காரரான குர்பாஸ் மற்றும் சசாய் ஆகியோரை விரைவில் ஆட்டமிழக்க செய்து அசத்தினார் பும்ரா. நடு வரிசையில் உமர் சாய் 26 ரன்களும் , குல்பதின் நயிப் 17 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.அதன் பிறகு வந்த பேட்ஸ்மேன்களும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை.20 ஓவரில்  ஆப்கானிஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 134 ரன்களை மட்டுமே எடுத்தது.இதன் மூலம் இந்திய அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.இந்திய அணி தரப்பில் பும்ரா 3 விக்கெட்களை கைப்பற்றினார்.