தொடரை வெல்லப்போவது யார்? ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து இறுதி ஒருநாள் போட்டி

 

தொடரை வெல்லப்போவது யார்? ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து இறுதி ஒருநாள் போட்டி

இங்கிலாந்து Vs ஆஸ்திரேலியா போட்டிகள் சூடுபிடிக்கத் தொடங்கி விட்டன. இன்று இரு அணிகளுக்குமான இறுதி ஒருநாள் போட்டி பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறது.

இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது. டி20 போட்டிகள் மூன்றும், ஒருநாள் போட்டிகள் மூன்றும் ஆடுவதற்கான திட்டத்தில் உள்ளன.

தொடரை வெல்லப்போவது யார்? ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து இறுதி ஒருநாள் போட்டி

முதலில் நடைபெற்ற டி20 தொடரில் முதல் 2 போட்டிகளை வென்று இங்கிலாந்து தொடரைக் கைப்பற்றியது. கடைசி மற்றும் மூன்றாம் போட்டியில் மட்டும் ஆஸ்திரேலிய அணி ஆறுதல் வெற்றி பெற்றது.

முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அற்புதமான வெற்றியைத் தட்டிச்சென்றது.  மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் 1:0 எனும் கணக்கில் ஆஸ்திரேலிய அணி முன்னிலை பெற்றது. இரண்டாம் போட்டியையும் வென்றால் தொடரையும் கைப்பற்றிவிடலாம் என்ற எண்ணத்தோடு களத்தில் இறங்கியது ஆஸ்திரேலியா.  

தொடரை வெல்லப்போவது யார்? ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து இறுதி ஒருநாள் போட்டி

இங்கிலாந்து அணி 50 ஓவர்களின் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்களை மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலியா எளிதாக வென்றுவிடும் என நினைத்தது மாறாக, 48.4 ஓவர்களில் 10 விக்கெட்டுகளையும் இழந்து 207 ரன்களை மட்டுமே ஆஸ்திரேலிய வீரர்களால் எடுக்க முடிந்தது.

மூன்று ஒருநாள் போட்டிகளைக் கொண்ட போட்டியில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. அதனால், இன்றைய போட்டியின் வெற்றி தொடரையும் வென்றதாக அர்த்தம். எனவே, போட்டியில் விறுவிறுப்பு அதிகமாக இருக்கும்.

தொடரை வெல்லப்போவது யார்? ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து இறுதி ஒருநாள் போட்டி

இன்றைய போட்டியில் டாஸ் வின் பண்ணிய இங்கிலாந்து அணி கேப்டன் மோர்கன் முதலில் பேட்டிங் என முடிவெடுத்தார். ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக ஜாஸன் ராய் மற்றும் ஜானி பேர்ஸ்டோ இறங்கினார்கள்.

இங்கிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளிக்கும் விதமாக மிட்செல் வீசிய முதல் பந்தை எதிர்கொண்ட ஜாஸன் ராய், மேக்ஸ்வெலிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து இறங்கிய கோ ரூட் டும் டக் அவுட்டானார்.

தொடரை வெல்லப்போவது யார்? ஆஸ்திரேலியா Vs இங்கிலாந்து இறுதி ஒருநாள் போட்டி

கேப்டன் மோர்கன் 28 பந்துகளில் 23 ரன்கள் மட்டுமே எடுத்து ஆடம் ஸாம்பா பந்தில் மிட்சேலிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். அடுத்து இறங்கிய விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் 20 பந்துகளில் 8 ரன்கள் மட்டுமே எடுத்து அவுட்டானார்.

 தற்போது, பேர்ஸ்டோ நிலைத்து ஆடி, 87 பந்துகளில் 81 ரன்கள் எடுத்தும் சாம் பில்லிங்ஸ் 15 ரன்களோடும் ஆடி வருகின்றனர்.

இங்கிலாந்து அணி 26.3 ஓவர்களில் 137 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது. அதற்குள் 4 விக்கெட்டுகள் வீழ்ந்துவிட்டன.