’இந்தத் தடையால் பவுலர்களுக்கு பெரிய பிரச்சனை’ சச்சின் சொல்வது எதை?

 

’இந்தத் தடையால் பவுலர்களுக்கு பெரிய பிரச்சனை’ சச்சின் சொல்வது எதை?

இந்திய கிரிக்கெட் அணியில் பல முறியடிக்க முடியாத சாதனைகளைச் செய்தவர் சச்சின் டெண்டுல்கர். அவர் ஓய்வுக்குப் பிறகும் கிரிக்கெட் போட்டிகளைத் தொடர்ச்சியாகக் கவனித்து இளம் வீரர்களை ஊக்குவித்து வருகிறார்.

சமீபத்தில் தமிழக வீரர் நடராஜனை டெஸ்ட் அணியிலும் இடம்பெற வைக்க வேண்டும் என்ற கருத்தை வெளிப்படுத்தியிருதார் சச்சின் டெண்டுல்கர். அவர் தற்போது பவுலர்கள் எதிர்கொள்ளும் முக்கியச் சிக்கலைப் பற்றி பதிவிட்டு உள்ளார்.

’இந்தத் தடையால் பவுலர்களுக்கு பெரிய பிரச்சனை’ சச்சின் சொல்வது எதை?

கொரோனா காலத்தில் நடக்கும் போட்டிகளில் பல கட்டுப்பாடுகளை கிரிக்கெட் கவுன்சில் வித்தித்துள்ளது. கட்டி அணைத்துக்கொள்ள கூடாது, போட்டியில் கலந்துகொள்ளும் முன் தனிமைப்படுத்துதல் என்று பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அவற்றில் முக்கியமானது, பவுலர்கள் பந்தில் எச்சில் தடவக்கூடாது என்பது.

கிரிக்கெட் பந்தில் எச்சில் தடவினால் அதன் வழியே கொரோனா பரவ வாய்ப்பிருப்பதாகக் கவுன்சில் கருதியிருக்கலாம். ஆனால், இதைப் பற்றித்தான் சச்சின் டெண்டுல்கர் ஒரு கருத்தைக் கூறியிருக்கிறார்.

’இந்தத் தடையால் பவுலர்களுக்கு பெரிய பிரச்சனை’ சச்சின் சொல்வது எதை?

‘பந்தில் எச்சில் தடவ முடியாததால் பவுலர்கள் கடும் சிக்கல் ஏற்படுகிறது. ஊனமுற்றவர்களின் நிலைகூட என்றும் சொல்லலாம். இதனால், பேட்ஸ்மேன்களுக்கு இது நல்ல வாய்ப்பாக அமைந்துவிடுகிறது’ என்பதாகத் தெரிவித்திருக்கிறார்.

இந்தக் கட்டுப்பாட்டில் பவுலர்களுக்குப் பிரச்சனை இருந்தாலும், கொரோனா காலம் என்பதால் இந்தக் கட்டுப்பாட்டு கைவிடப்பட மாட்டாது என்றே தெரிகிறது.