டி20 உலகக்கோப்பைக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிப்பு

 
WI

டி20 உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணி அறிவிக்கப்பட்டுள்ளது
 
7-வது டி 20 உலக கோப்பை தொடர் அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவுள்ளது. மொத்தம் 12 அணிகள் இதில் விளையாடவுள்ளன. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா மற்றும் இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன. இதேபோல் முதல் சுற்றில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, ஜிம்பாப்வே உள்ளிட்ட 8 நாடுகளில் தகுதி பெறும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதி சுற்றுக்கு முன்னேறும். அடுத்த மாதம் நடைபெறவுள்ள போட்டிக்காக இப்போதே பல்வேறு நாடுகள் தங்கள் அணியை வலுப்படுத்த தொடங்கியுள்ளன. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா உள்ளிட்ட அணிகள் தங்களது அணியை அறிவித்துள்ளன. 

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை தொடருக்கான மேற்கிந்திய தீவுகள் அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோலஸ் பூரன் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், துணை கேப்டனாக ரோவ்மேன் பவல் நியமிக்கப்பட்டுள்ளார். சிம்ரன் ஹெட்மயர், ஓடியன் ஸ்மித், எவின் லூயிஸ், ஜேசன் ஹோல்டர் உள்ளிட்டோர் அணியில் இடம்பெற்றுள்ளனர். நட்சத்திர ஆல்ரவுண்டரான ஆந்த்ரே ரஸ்ஸேல் மற்றும் சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரேன் உள்ளிட்டோர் அந்த அணியில் சேர்க்கப்படவில்லை. 

Russel

மேற்கிந்திய தீவுகள் அணி : நிக்கோலஸ் பூரன் (கேட்ச்), ரோவ்மேன் பவல், யானிக் கரியா, ஜான்சன் சார்லஸ், ஷெல்டன் காட்ரெல், ஷிம்ரோன் ஹெட்மியர், ஜேசன் ஹோல்டர், அகேல் ஹொசைன், அல்சாரி ஜோசப், பிராண்டன் கிங், எவின் லூயிஸ், கைல் மேயர்ஸ், ஓபேட் மெக்காய், ரெய்மோன், ரெய்மான் ஒடியன் ஸ்மித் உள்ளிட்டோர் அந்த அணியில் இடம்பெற்றுள்ளனர்.