இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இங்கிலாந்து அணி 4 டெஸ்ட், 5 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. மேற்கண்ட தொடர்கள் பிப்ரவரி 5-ம் தேதி முதல் மார்ச் 28-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தியா – இங்கிலாந்து இடையேயான முதல் டெஸ்ட் போட்டி பிப்ரவரி 5ஆம் தேதி சென்னையில் நடைபெறவுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு

இந்நிலையில் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் விளையாடக்கூடிய இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ இன்று வெளியிட்டது. அதில் கோலி, ரோகித், மயங்க் அகர்வால், சுப்மான் கில், புஜாரா, ரகானே, ராகுல், ஹர்டிக் பாண்ட்யா, ரிஷப் பண்ட், சஹா, அஷ்வின்,குல்தீப், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், இஷாந்த் சர்மா, பும்ரா, சிராஜ், ஷர்துல் தாகூர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் சிறப்பாக விளையாடிய நடராஜனுக்கு இங்கிலாந்துக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.