ஆஸ்திரேலிய வீரர்களுக்கு ஜெர்ஸியை பரிசளித்த விராட் கோலி

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான பார்டர் - கவாஸ்கர் 4 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.
அகமதாபாத்தில் நடைபெற்ற 4வது மற்றும் கடைசி போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் உஸ்மான் கவாஜா 180 ரன்களும், விராட் கோலி 186 ரன்களும் எடுத்தனர். டெஸ்ட் கிரிக்கெட்டில் நீண்ட காலமாக சதம் அடிக்காமல் இருந்த விராட் கோலி, இந்த போட்டியின் மூலம் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு சதம் அடித்து கம் பேக் கொடுத்துள்ளார். இந்தத் டெஸ்ட் தொடர் வெற்றியின் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதி போட்டி வரும் ஜூன் 7ம் தேதி இங்கிலாந்தில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் மீண்டும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மல்லுக்கட்டுகின்றன. கடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி போட்டியில் இந்தியா அணி, நியூசிலாந்திடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. ஐபிஎல் தொடர் ஆனது பிளே ஆப் சுற்றை எட்டும் போது ஆறு அணிகள் தொடரிலிருந்து வெளியேறும் அந்த ஆறு அணியில் உள்ள இந்திய டெஸ்ட் வீரர்களை முன்கூட்டியே இங்கிலாந்து அனுப்பி டூயூக்ஸ் பந்தில் பயிற்சி ஈடுபடுத்த முடிவு செய்து இருப்பதாக இந்தியனின் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
nullVirat Kohli gifts his signed jersey to Usman Khawaja and Alex Carey. 🫶🏼 👑 👏🏼👏🏼#ViratKohli #Virat #UsmanKhawaja #Carey #INDvsAUS #INDvAUS #INDvsAUS4thTEST#AUSvsIND #Cricket #CricketTwitter #BGT2023#BorderGavaskarTrophy #TeamIndia #TestCricketpic.twitter.com/iPLMPLHnXH
— Cricopia.com (@cric_opia) March 13, 2023
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் உஸ்மான் கவாஜா மாற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோருக்கு விராட் கோலி தனது டெஸ்ட் ஜெர்சியை பரிசாக அளித்தார். இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) கோஹ்லி தனது ஜெர்சியை பரிசாக அளிக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளது. அதுமட்டுமன்றி, கோலி தனது பேட் ஒன்றை மார்னஸ் லாபுசாக்னேவுக்கு பரிசாக அளித்துள்ளார்.