தல தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம்; கொந்தளிக்கும் ரசிகர்கள்!

 

தல தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம்; கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமூக வலைத்தளங்களில் பிரபலமான ஒன்றான ட்விட்டரை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்துகிறார்கள். மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் தங்களது தனிப்பட்ட கணக்கை உறுதி செய்வதன் அடையாளமாக அவர்களுக்கு verified என்று சொல்லப்படும் ப்ளூ டிக் வசதியை ட்விட்டர் வழங்குகிறது. அரசியல் தலைவர்கள், விளையாட்டு வீராங்கனைகள், சினிமா பிரபலங்கள் என பல தரப்பினர் இந்த ப்ளூ டிக் வசதியை பெற்று இருக்கிறார்கள்.

தல தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம்; கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்த ப்ளூ டிக் வசதி பெற்றவர்களின் கணக்கு ஆக்டிவ்வாக இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் ட்விட்டர் அவர்களது ப்ளூ டிக்கை நீக்கிவிடும். அண்மையில் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடுவின் ட்விட்டர் பக்கத்தில் இருந்த ப்ளூ டிக்கை ட்விட்டர் நிறுவனம் நீக்கியது சர்ச்சையை கிளப்பியது. பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, 6 மாதமாக அவரது ட்விட்டர் கணக்கு ஆக்டிவ்வாக இல்லாததால் ப்ளூ டிக்கை நீக்கியதாக ட்விட்டர் நிறுவனம் விளக்கம் அளித்தது. பின்னர், மீண்டும் அதனை வழங்கிவிட்டது.

தல தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கம்; கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்த நிலையில், 8.20 மில்லியன் ஃபாலோயர்ஸ்களைக் கொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் மகேந்திர சிங் தோனியின் ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டுள்ளது. தோனி கடைசியாக ஜனவரி 8ஆம் தேதி பதிவிட்டுள்ளார் அதன் பிறகு அவரது டுவிட்டர் கணக்கு ஆக்டிவ்வாக இல்லை. இதன் காரணமாகவே அவரது ட்விட்டர் கணக்கில் இருந்து ப்ளூ டிக் நீக்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது. எனினும், இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் ட்விட்டர் நிறுவனம் தரப்பிலிருந்து தெரிவிக்கப்படவில்லை. கோடான கோடி ரசிகர்களைக் கொண்ட தல தோனியின் ட்விட்டர் கணக்கில் ப்ளூ டிக் நீக்கப்பட்டிருப்பது அவரது ரசிகர்களை கொந்தளிக்க செய்துள்ளது.