பிளே ஆஃப் சுற்றுக்கு செல்வது மும்பையா? பெங்களூரா? - இன்று 2 லீக் போட்டிகள்

 
rcb

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள கடைசி இரண்டு லீக் போட்டிகளில் ஐதராபாத் மற்றும் மும்பை அணியும், பெங்களூரு மற்றும் குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதாவது குஜராத், சென்னை, லக்னோ ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், மற்றொரு அணிக்கான போட்டியில் மூன்று அணிகள் உள்ளன. அதாவது மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகள் போட்டி போடுகின்றன. இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

இதேபோல் இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் பெங்களூரு அணியும் குஜராத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இன்றைய போட்டியில் பெங்களூரு அணி வெற்றி பெற்றால் எளிதில் அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் தகுதி பெற்றுவிடும். ஒருவேளை தோற்றால், மும்பை அணியின் முடிவை பொறுத்து முடிவு மாறாலாம். இன்றைய போட்டியில் பெங்களூரு தோல்வி அடைந்து மும்பை வெற்றி பெற்றால் மும்பை அணி பிளே ஆஃப் சுற்றுக்கு சென்றுவிடும். ஒருவேளை இரண்டு அணிகளுமே இன்றைய போட்டியில் தோற்றால் ராஜஸ்தான் அணிக்கு ரன்ரேட் அடிப்படையில் வாய்ப்பு உருவாகும். ஆகையா இன்றைய இரண்டு போட்டிகளுமே மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.