இன்றைய ஐபிஎல் போட்டியில் மும்பை-லக்னோ அணிகள் பலப்பரீட்சை!

 
mumbai

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 15 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு 15வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணியை எளிதில் வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி பெற்றது. 

இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது லக்னோவில் உள்ள மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.