இன்றைய லீக் போட்டியில் கொல்கத்தா-குஜராத் அணிகள் மோதல்!
இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பல்லப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 38 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதின. முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 176 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி 16வது ஓவரிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்றைய ஐபிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பல்லப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது இன்று இரவு 7.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. குஜராத் அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ள நிலையில், கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.


