தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்குமா சென்னை? - பஞ்சாப் அணியுடன் இன்று மோதல்!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 20 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறவுள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு கொல்கத்தாவில் உள்ள ஈர்டன் கார்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இதேபோல் இரவு 7.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. பஞ்சாப் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. இதேபோல் சென்னை அணியை பொறுத்தவரையில் 4 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் சென்னை அணி உள்ளது.