வெற்றிப் பாதைக்கு திரும்புமா சென்னை? - டெல்லி அணியுடன் இன்று மோதல்
Apr 5, 2025, 11:30 IST1743832831155

இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 16 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு 16வது லீக் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும், ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. லக்னோவில் நடைபெற்ற இந்த போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி லக்னோ அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் லீக் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது பிற்பகல் 3.30 மணிக்கு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது. டெல்லி அணி ஏற்கனவே விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று அசூர பலத்தில் உள்ளது. சென்னை அணியை பொறுத்தவரையில் 3 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. ஆகையால் இன்றைய போட்டியில் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.