பெங்களூருவை பழிதீர்க்குமா சென்னை? இன்று நடக்கிறது பரபரப்பான போட்டி!
Mar 28, 2025, 09:30 IST1743134403369

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றைய லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 7 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 8வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. கடந்த ஐபிஎல் சீசனில் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றில் இருந்து வெளியேற பெங்களூரு அணிதான் முக்கிய காரணம். ஆகையால் இன்றைய போட்டியில் அந்த தோல்விக்கு சென்னை அணி பதிலடி கொடுக்க தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இதனிடையே இன்றைய போட்டி குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர், பெங்களூரு உடனான போட்டியில் சென்னை அணியின் மிடில் ஆர்டரில் எந்த மாற்றமும்
இல்லை என கூறினார். இதேபோல் பெங்களூரு அணியின் பயிற்சியாளர் தினேஷ் கார்த்திக், சென்னை அணியுடனான இன்றைய போட்டி விறுவிறுப்பானதாக இருக்கும் என தெரிவித்தார்.