டிஎன்பிஎல்: சேப்பாக்- திருப்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டமும் மழையால் நிறுத்தம்

 

டிஎன்பிஎல்: சேப்பாக்- திருப்பூர் அணிகளுக்கிடையேயான ஆட்டமும் மழையால் நிறுத்தம்

நேற்று தொடங்கிய 5வது சீசன் டிஎன்பிஎல் டி 20 போட்டியின் தொடக்க ஆட்டமே மழையால் பாதியில் நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று களம் கண்ட கோவை, சேலம் ஆகிய இரு அணிகளுக்கும் சம புள்ளிகள் வழங்கப்பட்டன.

Image

இந்நிலையில் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணியும், திருப்பூர் தமிழன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இதில் முதலில் டாஸ் வென்ற சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி, பவுலிங்கை தேர்வு செய்தது.

திருப்பூர் தமிழன்ஸ் அணி 8.2 ஓவரில் வெறும் 36 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் அடுத்தடுத்து 7 விக்கெட்களை பறிக்கொடுத்தது. அடுத்து களமிறங்கிய எம்.முகமது- அஸ்வின் கிறிஸ் ஜோடி, திருப்பூர் அணியை சரிவிலிருந்து மீட்டது. இறுதியில் திருப்பூர் அணி 16.2 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 64 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டதால் ஆட்டம் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. எம்.முகமது 10 ரன்களும், அஸ்வின் கிறிஸ் 23 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர்.