பாலஸ்தீன கொடியுடன் திடீரென மைதானத்திற்குள் நுழைந்த நபரால் பரபரப்பு!

 
tn

tn

உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் பாலஸ்தீன கொடியுடன் ஒரு நபர் உள்ளே அத்துமீறி நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். நடப்பு உலக கோப்பை போட்டியில் தோல்வியே சந்திக்காத அணியாக திகழும் இந்திய அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறது. இதேபோல் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று 6வது முறையாக கோப்பையை கைப்பற்ற ஆஸ்திரேலிய அணி முனைப்பு காட்டி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்து வருகிறது.

இந்த நிலையில், உலக கோப்பை இறுதிப் போட்டி நடைபெறும் மைதானத்திற்குள் பாலஸ்தீன கொடியுடன் ஒரு நபர் உள்ளே அத்துமீறி நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது திடீரென ஒரு இளைஞர் கையில் பாலஸ்தீன கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழந்தார். அந்த நபர் வீராட்கோலியின் அருகே சென்று அவரது தோளில் கையை போட்டார். உடனடியாக மைதானத்திற்குள் நுழைந்த பாதுகாப்பு வீரர்கள் அந்த நபரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.