மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்தது ஏன்? - ரசிகர் பரபரப்பு வாக்குமூலம்

 
fan

திடீரென மைதானத்திற்கு ஒரு நபர் பாலஸ்தீன கொடியுடன் நுழைந்தார். அவரை பாதுகப்பு வீரர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். 

உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கான இறுதிப் போட்டி இன்று நடைபெற்று வருகிறது. அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றனர். இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்தது.

தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் களமிறங்கினர். சுப்மன் கில் 4 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் நிலைத்து நின்று ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 47 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஸ்ரேயஸ் ஐயர் வந்த வேகத்திலேயே வெளியேறினார். இதனை தொடர்ந்து கூட்டணி அமைத்த விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தனர். விராட் கோலி 54 ரன்களுக்கு அவுட் ஆன நிலையில், கே.எல்.ராகுல் 66 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்த வந்த ஜடேஜா 9 ரன்களிலும், சூர்யகுமார் யாதவ் 18 ரன்களிலும் வெளியேறினார். முகமது ஷமி 6 ரன்களும், பும்ரா ஒரு ரன்னிலும் ஆட்டமிழந்தனர். குல்தீப் யாதவ் 10 ரன்களும், சிராஜ் 9 ரன்களும் எடுத்தனர். இறுதியாக இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 240 ரன்கள் எடுத்தது. 

tn

இந்த நிலையில், திடீரென மைதானத்திற்கு ஒரு நபர் பாலஸ்தீன கொடியுடன் நுழைந்தார். அவரை பாதுகப்பு வீரர்கள் அங்கிருந்து அழைத்துச் சென்றனர். இதனிடையே இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் அத்துமீறி மைதானத்திற்குள் நுழைந்த நபர் மைதானத்திற்குள் நுழைந்ததற்கான காரணத்தை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: "என்னுடைய பெயர் ஜான். நான் ஆஸ்திரேலியாவில் இருந்து வந்திருக்கிறேன்; விராட் கோலியை காணவே மைதானத்திற்குள் நுழைந்தேன். நான் ஒரு பாலஸ்தீன ஆதரவாளன். இவ்வாறு கூறினார்.