ஓவல் டெஸ்ட் - இங்கிலாந்தை வீழ்த்தி இந்தியா த்ரில் வெற்றி
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் 5வது டெஸ்ட் போட்டியில் இந்தியா திரில் வெற்றி வெற்றிபெற்றது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையேயான 5வது டெஸ்ட் போட்டி லண்டனின் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. ஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்தியாவை பேட்டிங் செய்ய பணித்தது. தலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இங்கிலாந்து தனது முதல் இன்னிங்சில் 247 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.3வது இன்னிங்சில் இந்திய அணியில் ஜெய்ஸ்வாலின் அபார சதம் மற்றும் வாஷிங்டனின் அரை சதம் மூலம் 396 ரன்கள் சேர்த்து.பிறகு தனது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து 4ஆம் ஆட்ட நேர முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 339 ரன்கள் எடுத்து இருந்தது.
இங்கிலாந்து வெற்றி பெற 36 ரன்களும் இந்தியா வெற்றி பெற 4 விக்கெட் தேவை என்ற நிலையும் இன்று ஐந்தாவது நாள் ஆட்டம் தொடர்ந்தது. சிறப்பாக பதிவு செய்ய முகமது சிராஜ் ஸ்மித் மற்றும் ஓவர்டன் விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிரதீஷ் கிருஷ்ணா தனது தரப்பில் மேலும் ஒரு விக்கெட் வீழ்த்தி போட்டியை விறுவிறுப்பாற்றினார். காயமடைந்த இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஓக்ஸ் பேட்டிங் செய்ய வந்தார். இருப்பினும் முகமது சிராஜ் சிறப்பாக பந்து வீசி அட்கின்சன் விக்கெட் வீழ்த்தி இந்தியாவை ஆறு ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற வைத்தார். முதல் இன்னிங்ஸில் நான்கு வைக்கட்டும். இந்த இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளும் சேர்த்து 9 விக்கெட் களை எடுத்து ஆட்டநாயகன் விருதை வென்றார். இதன் மூலம் இந்தத் தொடர் 2 - 2 என சமனில் முடிந்தது.


