இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்? - 2வது தகுதி சுற்றில் மும்பை-குஜராத் பலப்பரீட்சை

 
MIvsGT

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நடைபெறவுள்ள இரண்டாவது தகுதி சுற்று போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இறுதி கட்டத்தை நெறுங்கியுள்ளது. இதில் சென்னை அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. முதல் தகுதி சுற்று போட்டியில் குஜராத் அணியை எதிர்கொண்ட சென்ன்னை அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் அந்த அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த நிலையில், அந்த போட்டியில் தோல்வி அடைந்த குஜராத் அணி இரண்டாது தகுதி சுற்றுக்கு சென்றது. இதேப்போல் வெளியேறுதல் சுற்றில் லக்னோ அணியும், மும்பை அணியும் மோதின. இதில் மும்பை அணி லக்னோ அணியை 81 ரன்கள் வீழ்த்தி இரண்டாவது தகுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த நிலையில்,  இன்று நடைபெறவுள்ள இரண்டாது தகுதி சுற்று போட்டியில் மும்பை மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் வெற்றி பெறும் அணி வருகிற 28ம் தேதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடம் மோதும். 

இந்த நிலையில் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இன்றிரவு அரங்கேறும் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்றில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், முன்னாள் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணியும் மல்லுக்கட்டுகின்றன.  முதலாவது தகுதி சுற்றில் சென்னையிடம் நெருங்கி வந்து தோற்ற குஜராத் அணி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகிறது. இதேபோல் லக்னோ அணியுடன் வெற்றி பெற்ற மும்பை அணி இன்றைய போட்டியிலும் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தகுதி பெற முயற்சிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.