எகிரும் எதிர்ப்பார்ப்பு! மும்பை-குஜராத் அணிகள் இன்று மோதல்

 
GTvsMI

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கிய போட்டிகள் மே 27ம் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை 56 லீக் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகளை தவிர மற்ற அனைத்து அணிகளுக்குமே பிளே ஆஃப் சுற்றுக்குள் செல்ல வாய்ப்பு உள்ளதால் இந்த தொடர் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில், இன்று இரவு நடைபெறவுள்ள லீக் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. 

ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் அணி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் 8 வெற்றி, 3 தோல்வி என 16 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. குஜராத் அணி இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழையும் என்பதால் வெற்றி பெற தீவிரம் காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதேபோல் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 5 தோல்வியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்த சுற்றுக்கு சிரமமின்றி தகுதி பெற வேண்டும் என்றால் அடுத்து வரும் ஆட்டங்கள் அனைத்திலும் வெற்றி பெற வேண்டியது முக்கியமானதாகும். இதனால் மும்பை அணியும் வெற்றி பெற முனைப்பு காட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.