டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா தோல்வி- இருந்தும் ரசிகர்கள் மகிழ்ச்சி

 
t20

டி20 உலகக் கோப்பை போட்டியில் இந்தியா மற்றும் தென்னாபிரிக்கா அணிகள் மோதிய இந்த ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் இந்தியா தோல்வி அடைந்திருந்தாலும் ரசிகர்கள் வரவேற்று உள்ளனர். நடைபெற்று வரும் டி20 உலககோப்பையும், 2011ல் இந்தியா வென்ற 50 ஓவர் உலகக்கோப்பையையும் ஒப்பிட்டு இந்த முறையும் இந்தியா கோப்பையை வெல்லும் என சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

t20

இந்த இரு உலக கோப்பைகளிலும் அயர்லாந்து அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தி இருக்கிறது. இந்த இரு உலக கோப்பையில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்விடைந்து உள்ளது. இரு உலக கோப்பைகளிலும் தென் ஆப்பிரிக்கா அணி இந்திய அணியை இரண்டு பந்துகள் மீதம் வைத்து வெற்றி பெற்றுள்ளது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி ஓரியோ விளம்பரத்தில், கடந்த 2011 இல் ஓரியோ பிஸ்கட் அறிமுகப்படுத்தப்பட்டது, அப்போது இந்திய அணி உலக கோப்பையை வென்றது. அதேபோல் 2022 ஆம் ஆண்டு இப்போது, ஓரியோ பிஸ்கட் மறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது, ஆதலால் இந்த முறையும் உலககோப்பையை வெல்லும் என கூறியிருந்தார். இது போன்ற காரணங்களால் இந்திய அணி உலக கோப்பையை நிச்சயம் வெல்லும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.