டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்- இந்திய அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்லுமா?

 
T20 World Cup Semi-Final: India Vs England

இந்தியா - இங்கிலாந்து இடையேயான டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதிப் போட்டி நடக்கும் கயானாவில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. மழை காரணமாக போட்டி ரத்தானால், இந்திய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதிப்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதுகின்றன. இந்திய அணி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா,ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய மூன்று அணிகளையும் வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.  மறுபுறம் இங்கிலாந்து அணி தென்னாப்பிரிக்கா அணியிடம் தோல்வி அடைந்தாலும் மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்க அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

அணியில் திறன் வாய்ந்த வீரர்கள் மற்றும் ஃபார்ம் அடிப்படையில் பார்த்தால் இந்திய அணி எளிதில் வெற்றி பெறும் என கருதப்பட்டாலும் , கடந்த 10 வருடங்களாக இந்திய அணி நாக் அவுட் எனப்படும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் சொதப்பி உள்ளதும் குறிப்பிடத்தக்கது. கடைசியாக 2022-ல் நடந்த டி20 உலகக் கோப்பை அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின அதில் இங்கிலாந்து அணி 10 விக்கெட் விகிதத்தில் அபார வெற்றி பெற்றது.

Image

இந்த நிலையில் போட்டி நடைபெறும் மேற்கிந்திய தீவுகளின் கயானா பகுதியில் தொடர்ந்து மழை பெய்கிறது. சமீபத்திய வானிலை அறிக்கைப்படி போட்டி தொடங்கும் முதல் 2 மணி நேரத்துக்கு ஆட்டம் பாதிக்கப்படும் என்று தெரிகிறது அதன் பிறகும் மழை அச்சுறுத்தல் இருக்கிறது. இன்றைய ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டால் ரிசர்வ் டே எனப்படும் மாற்று நாள் இந்த போட்டிக்கு இல்லை. அதற்கு பதிலாக நான்கு மணி நேரம் கூடுதலாக ஆட நேர அவகாசம் உள்ளது. ஆட்டத்தை குறைந்தபட்சம் இரு அணிகளும் தலா 10 ஓவர்கள் பேட்டிங் பிடிக்கும் விதம் நடத்த பட வேண்டும். அதற்கு கீழோ அல்லது பேட்டிங் செய்ய முடியாமல் போனாலோ சூப்பர் 8 சுற்றில் முன்னிலையில் உள்ள அணி இறுதிப் போட்டிக்கு நேரடியாக முன்னேறும். அதன்படி சூப்பர் 8 சுற்றில் இந்திய அணி அனைத்து ஆட்டத்திலும் வெற்றி பெற்றதால் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெறும் மணி வரும் சனிக்கிழமை தென்னாப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.