இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் இன்று பிரதமருடன் சந்திப்பு
Jul 4, 2024, 08:04 IST1720060455842

17 ஆண்டுகளுக்கு பிறகு உலகக் கோப்பையுடன் இந்திய வீரர்கள் இந்தியா வந்தடைந்தனர். டி20 உலகக்கோப்பையை வென்ற வீரர்களுக்கு டெல்லி விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர்.
இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை சந்தித்து இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் வாழ்த்து பெறுகின்றனர். மும்பை வான்கடே மைதானத்தில் இன்று மாலை இந்திய வீரர்களுக்கு 125 கோடி பரிசுத்தொகை வழங்கப்படுகிறது.
முன்னதாக பார்படாஸில் புயல் காரணமாக விமானசேவை நிறுத்தப்பட்டிருந்ததால், நாடு திரும்ப முடியாமல் இந்திய அணி அங்கேயே சிக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.