இங்கிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட்- இந்திய அணி அபார வெற்றி

 
ட்க்

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி மற்றும் அபிஷேக் சர்மா அசத்தலில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

வ்

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் டி20 போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு அணியில் இடம் பிடித்த இந்திய முன்னணி வேகப்பந்துவீச்சாளர் முகமது சமி இந்த போட்டியில் சேர்க்கப்படவில்லை,ஒரே ஒரு பிரதான வேகப்பந்துவீச்சாளர் உடன் இந்திய அணி ஆடியது அனைவரைக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

பேட்டிங்கை தொடங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்திலேயே தடுமாறியது. இந்திய அணியின் அர்ஷ்தீப் சிங் முதல் மூன்று ஓவர்களிலேயே 2 விக்கெட்களை வீழ்த்தினார். அதன் பின் பட்லர் மற்றும் ஹாரி புரூக் ஒரு சிறிய கூட்டணியை அமைத்து இந்திய அணிக்கு அச்சுறுத்திய போது சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி அடுத்தடுத்து 3 விக்கெட்களை வீழ்த்தி இங்கிலாந்து பேட்ஸ்மேன்களை திணற வைத்தார். மறுபுறம் தனியாக போராடிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 44 பந்துகளில் 68 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். மற்ற பேட்ஸ்மேன்கள் இந்திய அணியின் பந்து வீச்சாளர்களை சந்திக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 132 ரன்கள் மட்டுமே எடுத்தது.

த்

133 ரன்கள் என்ற எளிய இலக்கை துரத்திய இந்திய அணியில் சஞ்சு சாம்சங் 26 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்து கேப்டன் சூர்யகுமார் யாதவ் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். மற்றொரு துவக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 20 பந்துகளில் அரை சதம் அடித்து அசத்தினார். தொடர்ந்து அதிரடியாக ஆடிய அபிஷேக் ஷர்மா 34 பந்துகளில் 79 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.12.5 ஓவர் முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 133 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.