டி20 உலகக்கோப்பை- இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்

 
இந்தியா

9வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. 

இந்தியா

இதில் இரண்டாவது அரையிறுதி போட்டியில் இந்திய அணியும் இங்கிலாந்து அணியும் மோதின.போட்டி நடைபெறும் கயானாவில் மழை அவ்வப்போது விட்டு விட்டு பெய்தது இதனால் ஆட்டம் சிறிது தாமதமாகவே தொடங்கியது.

டாஸ் வென்ற இங்கிலாந்தின் கேப்டன் பட்லர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணியில் விராட் கோலி 9 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தார். அடுத்து வந்த ரிஷப் பன்ட் 4 ரன்கள் ஆட்டமிழக்க இதன் பிறகு கேப்டன் ரோஹித் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஜோடி சேர்ந்து அபாரமாக ஆடினார். சிறப்பாக ஆடிய ரோகித் சர்மா 57 ரன்களும் , சூர்யகுமார் யாதவ் 47 ரன்களும் எடுத்து ஆட்டமிந்தனர்.இறுதிக்கட்டத்தில் ஹர்திக் பாண்டியா 23 ரன்களும்,ஜடேஜா 17 ரன்களும் எடுத்தனர்.20 ஓவர் முடிவில் இந்திய‌ அணி 7 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்களை எடுத்தது.

இந்தியா

172 என்ற இலக்கை துரத்திய இங்கிலாந்து அணி முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 26 ரன்களை எடுத்திருந்தது. இதன்பிறகு அக்சர் படேல் சுழலில் இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. அக்சர் படேல் பட்லர்,பேர்ஸ்டோ,மொயின் அலி ஆகியோரை அடுத்தடுத்து ஆட்டமிழக்க செய்ய மறுபுறம் பும்ரா சால்ட் விக்கெட்டை வீழ்த்தினார். 26 ரன்னுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த இங்கிலாந்து அணி 49 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்தது. இந்த சரிவிலிருந்து இங்கிலாந்து அணிகள் இறுதி வரை மீளவே முடியவில்லை.16.4 ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 103 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் இந்திய அணி 68 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இந்திய அணி தரப்பில் அக்சர் படேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் தலா மூன்று விக்கெட்களை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினர்.

வரும் சனிக்கிழமை நடைபெறும் இறுதிப் போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்கா அணியுடன் மோத உள்ளது.