தொடர் தோல்வியால் கடுப்பான பிசிசிஐ- இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடு

 
BCCI

இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் அனைவரும் இனி கண்டிப்பாக உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என பிசிசிஐ கூறியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி  வீரர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி, “உள்ளூர் போட்டிகளில் கட்டாயம் விளையாட வேண்டும். போட்டியின் போது தனி வாகனத்தில் செல்ல அனுமதி இல்லை. அனுமதியின்றி மேலாளர், உதவியாளர்களை வெளிநாட்டு தொடர்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது. வெளிநாடு தொடருக்கு 150 கிலோ லக்கேஜை மட்டுமே எடுத்து செல்ல அனுமதிக்கப்படும். பயிற்சி முடியும் வரை அணியுடன் இணைந்திருக்க வேண்டும்.


தொடரின்போது, பிசிசிஐ சார்ந்த விளம்பரங்களில் கட்டாயம் நடிக்க வேண்டும், மற்ற விளம்பரங்களில் நடிக்கக்கூடாது. குடும்பத்தினரை அழைத்து செல்வதில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படும். வெளிநாடு தொடரின்போது 2 வாரங்களுக்கு மட்டுமே குடும்பத்தினருடன் தங்க அனுமதி வழங்கப்படும். தங்கும் செலவை மட்டுமே பிசிசிஐ ஏற்கும், ஏனைய செலவிற்கு வீரர்களே பொறுப்பு. பயிற்சியாளர், கேப்டன் அனுமதிக்கும் தேதிகளில் மட்டும் குடும்பத்தினருடன் தங்கலாம்” எனக் கூறியுள்ளது.