உலக கோப்பை கிரிக்கெட் - டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சு தேர்வு!

 
indvssri

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதுவரை 32 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. இது வரை நடந்து முடிந்த போட்டி முடிவுகளின் படி தென் ஆப்ரிக்க அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 6 போட்டிகளில் விளையாடி 6 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ள இந்திய அணி ரன்ரேட்டில் பின் தங்கியுள்ளதால்  புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலிய அணி இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி இரண்டு தோல்வியுடன் புள்ளிப் பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. 7 போட்டிகளில் விளையாடியுள்ள நியூசிலாந்து அணி 4 வெற்றி 3 தோல்வியுடன் 4வது இடத்தில் உள்ளது.   

IND

இந்த நிலையில், இன்று நடைபெற்று வரும் 33வது லீக் போட்டியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டியானது மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது. இந்த இலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் காரணமாக இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது.