வெற்றி பெறுமா சென்னை சூப்பர் கிங்ஸ் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

 

வெற்றி பெறுமா  சென்னை சூப்பர் கிங்ஸ் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தை எதிர்கொள்கிறது சென்னை சூப்பர் கிங்ஸ்.

7 போட்டிகளில் சென்னை அணி 5 போட்டிகளில் தோல்வியடைந்து இரண்டு போட்டிகள் மட்டுமே வென்றுள்ளது. இன்றைய போட்டியுடன் சேர்த்து எஞ்சியுள்ள 7 போட்டிகளில் 6 போட்டிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் சென்னை அணிக்கு உள்ளது. அப்படி வெற்றி பெற்றால் மட்டுமே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வாய்ப்புள்ளது.

வெற்றி பெறுமா  சென்னை சூப்பர் கிங்ஸ் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

சென்னை – ஹைதராபாத் அணிகள் இதுவரை 13 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. இதில் சென்னை அணி 9 போட்டிகளிலும், ஹைதராபாத் அணி 4 போட்டிகளிலும் வெற்றி கண்டுள்ளது.

வெற்றி பெறுமா  சென்னை சூப்பர் கிங்ஸ் : எதிர்பார்ப்பில் ரசிகர்கள் !

ராஜஸ்தானுக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் தோல்வி அடைந்தது . அதேபோல் சென்னை அணி கடந்த 2 போட்டிகளிலும் மோசமான ஆட்டத்தின் மூலம் சிக்கலில் உள்ளது. இதனால் இரு அணிகளும் வெற்றிபெற வேண்டிய நெருக்கடியில் இன்று களம் காணவுள்ளார்கள்.