2வது டெஸ்ட்- தென்னாப்பிரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

 
INDvsSA

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகஹனஸ்பர்க்கில் உள்ள வான்டரர் மைதானத்தில் கடநத திங்கள்கிழமை தொடங்கியது.

indvssa

முதலில் பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி தனது முதல் இன்னிங்சில் 202 ரன்கள் எடுத்தது.இதனை தொடர்ந்து ஆடிய தென் ஆப்பிரிக்க அணி தனது முதல் இன்னிங்ஸில் 229 ரன்கள் எடுத்தது. இதனைத் தொடர்ந்து ஆடிய இந்திய அணி தனது 2வது இன்னிங்சில் 266 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

240 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி நேற்றைய ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் எடுத்து இருந்தது.இன்று 4வது நாள் ஆட்டம் பெரும்பாலும் மழையால் பாதிக்கப்பட்டது. மழை நின்றபின் ஆட்டத்தை தொடர்ந்த தென்னாபிரிக்க அணியில் ராசி வாண்டர் டுசன் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.
அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் அபாரமாக ஆடி 96 ரன்கள் குவித்தது இறுதி வரை ஆட்டமிழக்காமல் தென்னாப்பிரிக்க அணியை வெற்றி பெறச் செய்தார்.67.4 ஓவர் முடிவில் தென்னாப்பிரிக்க அணி 3 விக்கெட் இழப்பிற்கு 243 ரன்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 

இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 1 என சமனில் உள்ளது. மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி வருகின்ற 15ஆம் தேதி கேப்டவுனில் துவங்குகிறது.