ஒருநாள் போட்டிகளில் 10,000 ரன்கள் - சச்சின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா

 
rohit

சர்வதேச அளவில் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ள கேப்டன் ரோகித் சர்மா, சச்சின் டெண்டுல்கரின் சாதனையை முறியடித்துள்ளார். 

16வது ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் இலங்கையில் நடைபெற்று வருகிறது. முதல் நான்கு இடங்களை பிடித்த பாகிஸ்தான், இந்தியா, வங்கதேசம், இலங்கை ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியுள்ளன. நேற்று நடைபெற்ற சூப்பர் 4 சுற்று போட்டியில் இந்தியா மற்று பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்றைய சூப்பர் 4 சுற்றில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலாவதாக பேட்டிங்கை தேர்வு செய்தார்.  

indvssri

இன்றைய போட்டியில் ரோகித் சர்மா 22 ரன்கள் எடுத்திருந்த போது சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இந்த சாதனையின் மூலம் ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையை படைத்தார். ரோகித் சர்மா 241வது  போட்டியில் இந்த சாதனையை படைத்துள்ளார். மேலும் சச்சின் டெண்டுல்கரின் சாதனையையும் முறியடித்தார். இந்த பட்டியலில் விராட் கோலி முதல் இடத்தில் உள்ளார். விராட் கோலி 205 போட்டிகளில் 10 ஆயிரம் ரன்களை கடந்தார். இதேபோல் சச்சின் டெண்டுல்கர் 259 போட்டிகளில் இந்த சாதனையை படைத்தார்.