ஜடேஜாவும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு

 
ஜடேஜா

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுக்கு இடையிலான  உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இந்த வெற்றிக்குப் பின்னர் ஆட்டநாயகனை விருது வென்ற விராட் கோலி தான் சர்வதேச டி20லிருந்து விடை பெறுவதாக தெரிவித்தார். மேலும் கூறிய அவர் கோப்பையை வென்று விட்டதாகவும் வருங்கால இளைஞர்களுக்கு வழியிடுவதால் இந்த ஓய்வு முடிவை எடுத்திருப்பதாக அறிவித்திருந்தார். பின்னர் செய்தியாளர் சந்திப்பின் போது கேப்டன் ரோஹித் சர்மா டி20 போட்டியில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த நிலையில் இன்று இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தானும் டி20 உலக்கோப்பையில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் அவர் வெளியிட்டுள்ள பதிவில் "இதயம் நிறைந்த நன்றியுடன், டி20 சர்வதேசப் போட்டிகளில் இருந்து விடைபெறுகிறேன்.  உறுதியான குதிரையைப் போல் பெருமையுடன் துள்ளிக் குதிப்பது போல, நான் எப்போதும் என் நாட்டிற்காக என்னால் முடிந்ததைச் செய்து வருகிறேன், மற்ற வடிவங்களிலும் அதைத் தொடர்ந்து செய்வேன்.  டி20 உலகக் கோப்பையை வெல்வது ஒரு கனவு நனவாகும், இது எனது டி20 சர்வதேச வாழ்க்கையின் உச்சம்.  நினைவுகள், மகிழ்ச்சிகள் மற்றும் அசைக்க முடியாத ஆதரவுக்கு நன்றி”.

இன்று இந்த நிலையில் கோலி,ரோஹித்,ஜடேஜா என முன்னணி வீரர்கள் அடுத்தடுத்து ஓய்வு அறிவிப்பது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.