ஐபிஎல் முடிஞ்சா என்ன?… இருக்கவே இருக்கிறது உள்நாட்டு தொடர்கள் – ரசிகர்களுக்கு பிசிசிஐயின் ட்ரிபிள் ட்ரீட்!

ஐபிஎல் முடிஞ்சா என்ன?… இருக்கவே இருக்கிறது உள்நாட்டு தொடர்கள் – ரசிகர்களுக்கு பிசிசிஐயின் ட்ரிபிள் ட்ரீட்!

கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பல்வேறு கிரிக்கெட் தொடர்கள் ரத்துசெய்யப்பட்டன. அதில் மிக முக்கியமானவை இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்கள். ரஞ்சி தொடர், விஜய் ஹசாரோ ஆகிய தொடர்கள் ரத்து செய்யப்பட்டன. ஆனால் ஐபிஎல் மட்டும் ஐக்கிய அரபு அமீரகத்தில் மிகவும் பாதுகாப்பாக வெற்றிக்கரமாக நடத்திமுடிக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் குறைந்திருப்பதால் மீண்டும் உள்நாட்டு போட்டிகள் மீது இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐயின் கவனம் திரும்பியுள்ளது.

ஐபிஎல் முடிஞ்சா என்ன?… இருக்கவே இருக்கிறது உள்நாட்டு தொடர்கள் – ரசிகர்களுக்கு பிசிசிஐயின் ட்ரிபிள் ட்ரீட்!

ஐபிஎல் தொடரில் எஞ்சிய போட்டிகள் நடந்துமுடிந்த பின்னர் இந்தியாவில் உள்நாட்டு தொடர்கள் தொடங்கவிருப்பதாக பிசிசிஐ அறித்துள்ளது. அதற்கான அட்டவணையும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் முடிந்தவுடன் சீனியர் கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்கும் சையத் முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 தொடர் அக்டோபர் 27ஆம் தேதி தொடங்கும். 2022ஆம் ஆண்டு ஜனவரி 5ஆம் தேதி முதல் மார்ச் 20ஆம் தேதிவரை ரஞ்சி கோப்பை தொடர் நடைபெறுகிறது.

ஐபிஎல் முடிஞ்சா என்ன?… இருக்கவே இருக்கிறது உள்நாட்டு தொடர்கள் – ரசிகர்களுக்கு பிசிசிஐயின் ட்ரிபிள் ட்ரீட்!

ஒருநாள் போட்டிக்கான விஜய் ஹசாரே தொடர் இந்தாண்டு டிசம்பர் 1ஆம் தேதி தொடங்கி 29ஆம் தேதி வரை நடக்கும். இதில் முதல் முறையாக சீனியர் மகளிருக்கான அணியும் பங்கேற்கிறது. இவர்களுக்கு அக்டோபர் 20ஆம் தேதி முதல் நவம்பர் 20ஆம் தேதிவரை போட்டிகள் நடத்தப்படவுள்ளன. 19 வயதுக்குட்பட்ட ஆடவர், மகளிருக்கான வினு மன்கட் ஒருநாள் போட்டித் தொடர் வரும் செப்டம்பர் 20ஆம் தேதி ஆரம்பமாகிறது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான சேலஞ்சர் கோப்பை ஆடவருக்கு அக்டோபர் 25ஆம் தேதியும், மகளிருக்கு அக்டோபர் 26ஆம் தேதியும் தொடங்குகிறது.