#IPL ராஜஸ்தானை எளிதில் வீழ்த்திய பஞ்சாப்

 
ஐபிஎல்

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 65வது லீக் ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் , சாம் கரண் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.

இப்ல்

டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.ராஜஸ்தான் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக ஜெய்ஸ்வால் 4 ரன்னிலும்,கேட்மோர் 18 ரன்னிலும்,சஞ்சு சாம்சம் 18 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன்பிறகு ரியான் பராக் மற்றும் அஸ்வின் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினார். அஸ்வின் 28 ரன்களில் ஆட்டமிழக்க தனி ஆளாக போராடிய ரியான் பராக் 34 பந்துகளில் 48 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் அணி 9 விக்கெட் இழப்பிற்கு 144 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ஐபிஎல்

145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பஞ்சாப் அணியும் ஆரம்பத்தில் தடுமாறியது. பிரப்சிம்ரன் சிங் 6 ரன்னிலும்,பேர்ஸ்டோவ் 14 ரன்னிலும்,ரூசவ் 22 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதன் பிறகு சாம் கரன் மற்றும் ஜிதேந்தர் சர்மா ஜோடி சேர்ந்தனர். நிதானமான ஆடிய ஜோடியை சாஹல் பிரித்தார்.ஜிதேந்தர் சர்மா 22 ரன்னில் சிக்ஸர் அடிக்க முயன்று எல்லைக்கோட்டின் அருகே கேட்ச் ஆகி வெளியேறினார். கேப்டன் சாம் கரன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 63 ரன்கள் சேர்த்தார்.18.5 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி ஐந்து விக்கெட் இழப்பிற்கு 145 ரன்கள் எடுத்தது. இது ராஜஸ்தான் அணியின் நான்காவது தொடர் தோல்வி ஆகும். பிளே ஆப் சமயத்தில் தொடர் தோல்வியால் அந்த அணியின் தொடர் தோல்வி அந்த அணிக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.