சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராஜஸ்தான் வெற்றி!

 
csk vs rr

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 10 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு 7.30 மணிக்கு கவுகாத்தி மைதானத்தில் நடைபெறவுள்ள 10வது லீக் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரியான் பராக் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 182 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து விளையாடிய சென்னை அணி 20 ஓவரில் 176 ரன்கள் மட்டுமே அடித்து தோல்வி அடைந்தது. 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது. தனது அபார பந்துவீச்சால் CSK அணியிடம் இருந்து வெற்றியை தடிப்பறித்தார் ராஜஸ்தான் வீரர் சந்தீப் ஷர்மா. கவுகாத்தியில் நேற்று நடந்த போட்டியில் கடைசி ஓவரில் வெற்றிக்கு 20 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 13 ரன்கள் மட்டுமே கொடுத்து அசத்திய சந்தீப், 2023லும் 21 ரன்கள் தேவைப்பட 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து ராஜஸ்தான் அணிக்கு வெற்றியை தேடித் தந்தார். 2023-யை போல நேற்றும் தோனி, ஜடேஜா இணை களத்தில் இருந்தாலும், 20வது ஓவரின் முதல் பந்தில் தோனியை வீழ்த்தி ஆட்டத்தை மாற்றினார்.