ரசிகர்கள் அதிர்ச்சி! இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்தவரான ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தியா மட்டுமின்றி சர்வதேச போட்டிகளில் சிறந்து விளங்கியவர் ஆவார். இவர் பந்துவீச்சு மட்டுமில்லாமல் பேட்டிங்கிலும் சிறப்பான ஆட்டம் ஆடக்கூடியவர். இவர் சர்வதேச போட்டிகளில் இதுவரை 765 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 537 விக்கெட்களை டெஸ்டிலும், 156 விக்கெட்களை ஒருநாள் போட்டியிலும், 72 விக்கெட்களை டி20 போட்டிகளில் வீழ்த்தி உள்ளார். டெஸ்ட் போட்டிகளில் இவர் 6 சதங்கள் உட்பட 3,506 ரன்கள் எடுத்துள்ளார்.
இந்த நிலையில், அஸ்வின் அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அஸ்வினின் இந்த அறிவிப்பு இந்திய ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இருப்பினும் அஸ்வின் உள்ளூர் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவார் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி அஸ்வினை ஏலத்தில் எடுத்தது குறிப்பிடதக்கது.