இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி- இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி- இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக தற்போது இங்கிலாந்தில் முகாமிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடுவதற்காக கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக அங்கு இந்திய அணி வீரர்கள் தங்கியுள்ளனர். அதேசமயம், ஷிகர் தவான் தலைமையிலான இளம் வீரர்கள் கொண்ட மற்றொரு இந்திய அணி, இலங்கையில் டி 20 போட்டிகளை விளையாடிவருகிறது.

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டி- இந்திய அணி வீரர்கள் பட்டியல் வெளியீடு

இதனிடையே இங்கிலாந்தில் முகாமிட்டுள்ள இந்திய வீரர்களில் பேட்ஸ்மேன் ஷூப்மன் கில், ஸ்பின் ஆல்ரவுண்டர் வஷிங்டன் சுந்தர் மற்றும் ஃபாஸ்ட் பவுலர் ஆவேஷ் கான் ஆகிய மூன்று பேர் காயத்தால் வெளியேறியுள்ளனர். இந்த வீரர்களுக்கு மாற்றாக இலங்கையில் விளையாடிவரும் பிரித்விஷா மற்றும் சூர்ய குமார் யாதவ் ஆகியோரை இங்கிலாந்து அனுப்ப பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி வீரர்களின் புதிய பட்டியலில், விராட் கோலி(கேப்டன்), அஜிங்க்யா ரஹானே(துணை கேப்டன்), ஹனுமா விஹாரி, ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, மயன்க் அகர்வால், புஜாரா, ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ஜஸ்ப்ரித் பும்ரா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி, முகமது சிராஜ், ஷர்துல் தாகூர், உமேஷ் யாதவ், கேஎல் ராகுல், அபிமன்யூ ஈஸ்வரன், பிரித்வி ஷா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.