தொடரும் தோல்வி! பஞ்சாப் அணியிடம் 18 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை தோல்வி!

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் சென்னை அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்றா பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
இதனையடுத்து பேட்டிங்கை தொடங்கிய விளையாடிய பஞ்சாப் அணியில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் விழுந்த போதிலும், தொடக்க ஆட்டக்காரர் பிரியான்ஷ் ஆர்யா அணியை சிறப்பாக வழிநடத்தி சென்றார். அவர் 103 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார். இறுதியாக பொறுப்புடன் விளையாடிய சஷாங் சிங் அவர் பங்குக்கு அரைசதம் விளாசினார். இறுதியாக பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி வழக்கம் போல் சொதப்பியது. சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.