பாரிஸ் ஒலிம்பிக்- வினேஷ் போகத் மனு தள்ளுபடி

 
மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மருத்துவமனையில் அனுமதி.. 

இந்திய மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் மனுவை சர்வதேச விளையாட்டு நடுவர் தீர்ப்பாயம் தள்ளுபடி செய்தது.

ஓய்வை அறிவித்தார் வினேஷ் போகத் - ரசிகர்கள் அதிர்ச்சி

29 வயதான ஹரியானாவைச்சேர்ந்த வினேஷ் போகத் இளம் வயதிலியே மல்யுத்தம் பயின்றார். தனது 19 வது வயதில் யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில் வெள்ளிப்பதக்கம் வென்று சாதித்தார். சீனியர் பிரிவில், உலக சாம்பியன்ஷிப், ஆசிய சாம்பியன்ஷிப், காமன்வெல்த் என அனைத்து தொடர்களில் பதக்கங்களை வென்று, தனது இல்லத்தையே பதக்கங்களால் அலங்கரித்தார். இரண்டு ஒலிம்பிக்கில் தோல்வி கண்ட வினேஷ் போகத்திற்கு, பாரிஸ் ஒலிம்பிக்கில், முதல் சுற்றே கடும் சவாலாக இருந்தது. தொடக்க சுற்றில் 4 முறை உலக சாம்பியனும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனுமான ஜப்பான் வீராங்கனையை சுசாகியை வீழ்த்தி அசத்தினார். காலிறுதியில் உக்ரைன் வீராங்கனையையும், அரையிறுதியில் கியூகா வீராங்கனையையும் தோற்கடித்து பதககத்தை உறுதி செய்தார் வினேஷ் போகத். ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனையான வினேஷ், தங்கப்பதக்கத்தை முத்தமிட காத்திருந்தார். ஆனால் ஒலிம்பிக்ஸ் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்ற இந்திய வீராங்கனை வினேஷ் போகத், சுமார் கூடுதலாக 100 கிராம் எடை இருந்ததாகக் கூறி 'திடீர்' தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.

வினேஷ் போகத்துக்கு பிரதமர் மோடி ஆறுதல்.. !

இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் இருந்து தன்னை தகுதி நீக்கம் செய்ததை ரத்து செய்யவும், தனக்கு வெள்ளிப் பதக்கம் வழங்கிடவும் வினேஷ் போகத் கோரிய நிலையில், அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது. தனக்கு வெள்ளிப்பதக்கம் வழங்க வேண்டுமென வினேஷ் போகத் தொடர்ந்த மனு மீதான விசாரணை மூன்று தள்ளிவைக்கப்பட்ட நிலையில் தள்ளுபடி செய்யப்பட்டது.