பாரிஸ் ஒலிம்பிக்- தகுதிச் சுற்றிலேயே வெளியேறிய இளவேனில் வாலறிவன்

பாரிஸ் ஓலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது.
விளையாட்டு உலகின் மிகப்பெரிய திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் நேற்று முன் தினம் கோலாகலமாக தொடங்கியது. உலகம் முழுவதுமிலிருந்து 206 நாடுகளிலிருந்து, 45 விளையாட்டுகளில் 329 பதக்க பிரிவுகள் என மொத்தம் 10,500 வீரர்கள் பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர். இந்தியாவில் 117 வீரர்கள் 70 பிரிவுகள் என 16 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். நடப்பு ஒலிம்பிக் தொடரில் ஸ்கேட் போர்டிங், பிரேக் டேன்ஸ், சர்ஃபிங், ஸ்போர்ட் க்ளைம்பிங் போட்டிகள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெறும் வீரர்களுக்கு வழங்கப்படும் பதக்கங்களில் பிரான்ஸ் நாட்டின் அடையாளாமாக விளங்கும் ஈபிள் டவரின் பழைய பாகங்களில் உள்ள இரும்பின் பகுதிகளைப் பதக்கத்தில் பதிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது. தங்கம், வெள்ளி, வெண்கலம் என் சுமார் 5,084 பதக்கங்களில் ஈபிள் டவரின் இரும்புகள் பதிக்கப்பட்டு வழங்கப்படவுள்ளது.
இந்நிலையில் பாரிஸ் ஒலிம்பிக்ஸ் மகளிருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இறுதிச்சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்து வெளியேறினார் இந்திய வீராங்கனை இளவேனில் வாலறிவன். தகுதிச்சுற்றில் முதல் 8 இடங்களை பிடிக்கும் வீராங்கனைகள் மட்டுமே அடுத்த சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற நிலையில், 10வது இடத்தைப் பிடித்து இளவேனில் வெளியேறினார். இதனால் பாரிஸ் ஓலிம்பிக் போட்டியில் துப்பாக்கி சுடுதலில் இந்திய அணி வெளியேறியது. 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவின் தகுதி சுற்றில் ரமிதா ஜிண்டால் - அர்ஜூன் பபுதா ஜோடி 6வது இடத்தையும், இளவேனில் வளரிவன் மற்றும் சந்தீப் சிங் ஜோடி 12வது இடத்தையும் பிடித்தன.