ஒலிம்பிக் போட்டி: 10 மீ துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய அணிக்கு ஏமாற்றம்..

 
10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய அணிக்கு ஏமாற்றம்!

பாரீஸ் ஒலிம்பிக்ஸ் 10 மீட்டர் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்திய கலப்பு இரட்டையர் அணிக்கு ஏமாற்றத்துடன் வெளியேறியது.  

33வது ஒபிம்பிக்ஸ் போட்டி பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸில் இன்று கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது.  உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான இந்த ஒலிம்பிக் போட்டியில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர் வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  வீரர் வீராங்கனைகளின் அணிவகுப்பு, வான வேடிக்கைகளுடன் கூடிய கண்கவர் நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது.  32 விளையாட்டு போட்டிகளில் 329 பிரிவில் பந்தயங்கள் நடைபெறவுள்ளன. குறிப்பாக இந்த ஒலிம்பிக் போட்டியில்  இந்தியாவில் இருந்து 112 போட்டியாளார்கள் 16 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கின்றனர்.  

ஒலிம்பிக் சின்னம்

இந்த நிலையில் 10 மீட்டர் ஏர் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவில் இருந்து  இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணை மற்றும்  ரமீதா – பபுதா அர்ஜூன் ஆகிய இரண்டு அணிகள் பங்கேற்றன. இந்த இரு அணிகளுமே 6 மற்றும் 12வது இடங்களையே பிடித்திருந்தன. ஆனால் தகுதிப் போட்டியில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் மட்டுமே அடுத்த சுற்றிற்கு தகுதிபெற முடியும்.  ஆகையால்  இளவேனில் வாலறிவன்-சந்தீப் சிங் இணையும்,  மற்றொரு இந்திய இணையான ரமீதா – பபுதா அர்ஜூன் இணையும் தகுதிச் சுற்றிலேயே  ஏமாற்றத்துடன் வெளியேறியது.