தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!

 
new zealand

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரின் 2வது அரையிறுதி போட்டியில் தென் ஆப்ரிக்காவை வீழ்த்தி நியூசிலாந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் பாகிஸ்தானில் நடைபெற்று வருகிறது. பாகிஸ்தான் செல்ல இந்திய அணி மறுப்பு தெரிவித்த நிலையில், இந்திய அணி விளையாடும் போட்டிகள் மட்டும் துபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது. லீக் சுற்றுகள் முடிவடைந்துள்ள நிலையில், இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறின. பாகிஸ்தான், இங்கிலாந்து, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் லீக் சுற்றுடன் வெளியேறின. முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதிய நிலையில்,  இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 

இந்த நிலையில், இன்று 2வது அரையிறுதி போட்டி நேற்று பாகிஸ்தானின் லாகூர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் நியூசிலாந்து மற்றும் தென் ஆப்ரிக்க அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் நியூசிலாந்து அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது. வருகிற 09ம் தேதி துபாய் மைதானத்தில் நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதவுள்ளன.