கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் தோல்விக்கான காரணம் என்ன? - எம்.எஸ்.தோனி பேட்டி

 
MS Dhoni

கொல்கத்தாவுக்கு எதிரான போட்டியில் சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், தோல்விக்கான காரணம் குறித்து எம்.எஸ்.தோனி கூறியுள்ளார். 

நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற 61வது லீக் போட்டியில் எம்.எஸ். தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார். இதனையடுத்து முதலாவதாக பேட்டிங் செய்த சென்னை அணி தொடக்கம் முதலே தடுமாறியது. இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 144ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 48 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 145 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி தொடக்கத்தில் திணறினாலும் இறுதியில் சிறப்பாக விளையாடியது. இறுதியில் 18. 3ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு கொல்கத்தா அணி 147ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

KKR

இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்வி குறித்து சென்னை கேப்டன் தோனி கூறியதாவது; இரண்டாவது இன்னிங்ஸில் முதல் பந்தை வீசிய நிமிடமே எங்களுக்கு 180 ரன்கள் தேவை என்று தெரிந்துவிட்டது. அப்போது தான் பேட்டிங் செய்திருக்கக்கூடாது என்பதை உணர்ந்தேன். ஆனால் இந்த ஆடுகளத்தில் 180 ரன்கள் எடுக்க எங்களுக்கு வாய்ப்பில்லாமல் போனது.  போட்டியில் பனிப்பொழிவு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. தோல்விக்கு யாரையும் குறை கூறமுடியாது. அனைவரும் தங்களால் முடிந்தவரை முயற்சி செய்தனர். இவ்வாறு தோனி கூறினார்.