சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி தீவிர வலைபயிற்சி - வீடியோ வைரல்!
இன்னும் சில நாட்களில் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
TATA ஐபிஎல் 2024ம் ஆண்டுக்கான போட்டி அட்டவனையை கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டது. முதல் 21 போட்டிகளுக்கான கால அட்டவணையை வெளியிட்டது ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியான பிறகு 2ம் கட்ட அட்டவணை வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் வருகிற மார்ச் 22ம் தேதி தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
Let’s fill the comments section with ________ 🔥#WhistlePodu 🦁💛 @msdhoni pic.twitter.com/Kw2pvbdTjG
— Chennai Super Kings (@ChennaiIPL) March 9, 2024
Let’s fill the comments section with ________ 🔥#WhistlePodu 🦁💛 @msdhoni pic.twitter.com/Kw2pvbdTjG
— Chennai Super Kings (@ChennaiIPL) March 9, 2024
இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி பயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோல் சென்னை அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனியும் தீவிர வலைபயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், எம்.எஸ்.தோனி வலைபயிற்சியில் ஈடுபட்டு வரும் வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது ரசிகர்களால் வைரலாக்கப்பட்டு வருகிறது.