சூரியகுமார் யாதவின் அதிரடி சதத்தில் வீழ்ந்த ஹைதராபாத்

 
Ipl

நடப்பு  ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 54வது லீக் ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும் , பாட் கம்மின்ஸ் தலைமையிலான ஹைதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோதின.

Ipl

டாஸ் என்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.பேட்டிங்கை தொடங்கிய சன்ரைசர்ஸ் அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். இறுதிகட்டத்தில் பாட் கம்மின்ஸ் 17 பந்துகளில் 35 ரன்கள் எடுத்தார்.20 ஓவரில் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 173 ரன்களை எடுத்தது.

இதனைத் தொடர்ந்து களமிறங்கிய மும்பை அணியில் இஷான் கிஷன் 9 ரன்களிலும், ரோகித் சர்மா 4 ரன்களிலும், நமன் திர் டக் அவுட்டாகியும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.பின்னர் சூர்யகுமார் யாதவ் - திலக் வர்மா கூட்டணி இணைந்தது. கம்மின்ஸ் வீசிய 6வது ஓவரில் அதிரடியை தொடங்கிய சூர்யகுமார் யாதவ் அதன்பின்
ஹைதராபாத் அணியின் அனைத்து பவுலர்களையும் சிக்சரும், பவுண்டரியுமாய்  அடித்தார்.சிறப்பாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 51 பந்துகளில் 6 சிக்ஸ், 12 பவுண்டரி உட்பட 102 ரன்களை விளாசினார்.17.2 ஓவர் முடிவில் மும்பை அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் குவித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
 

Ipl

தோல்வியடைந்த ஹைதராபாத் அணி பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்தாலும் நெட் ரன் ரேட்டில் பின்னோக்கி சென்றுள்ளதால் அந்த அணிக்கு அது பாதகத்தை ஏற்படுத்தி உள்ளது.