ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சு!

 
MI

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். 

16வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 31ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்கு மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன. அதாவது குஜராத், சென்னை, லக்னோ ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில், மற்றொரு அணிக்கான போட்டியில் மூன்று அணிகள் உள்ளன. அதாவது மும்பை, பெங்களூரு, ராஜஸ்தான் ஆகிய மூன்று அணிகள் போட்டி போடுகின்றன. இதனிடையே இன்று இரண்டு லீக் போட்டிகள் நடைபெறவுள்ளன. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதன் காரணமாக ஐதராபாத் அணி முதலாவதாக பேட்டிங் செய்யவுள்ளது. 

ஐதராபாத் அணி : மயங்க் அகர்வால், விவ்ராந்த் சர்மா, ஐடன் மார்க்ரம்(கேப்டன்), ஹென்ரிச் கிளாசென் , ஹாரி புரூக், நிதிஷ் ரெட்டி, க்ளென் பிலிப்ஸ், சன்வீர் சிங், மயங்க் டாகர், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக் உள்ளிட்டோர் ஐதராபாத் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மும்பை அணி : ரோஹித் சர்மா(கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் கிரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், நேஹால் வதேரா, கிறிஸ் ஜோர்டான், பியூஷ் சாவ்லா, ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், குமார் கார்த்திகேயா, ஆகாஷ் மத்வால் உள்ளிட்டோர் மும்பை அணியில் இடம்பெற்றுள்ளனர்.