ராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா? ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா! #IPL #RRvsKKR

ராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா? ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா! #IPL #RRvsKKR

ஐபிஎல் திருவிழாவில் நேற்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எளிதாக வென்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. இன்றைய போட்டியில் ராஸ்தான் ராயல்ஸ் அணியோடு மோதுகிறது கொல்கத்தா நைட்ரைடர்ஸ்.

ராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா? ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா! #IPL #RRvsKKR

ராஜஸ்தான் அணியின் முதல் மேட்ச் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியோடுதான். சஞ்சு சாம்சன் 74, ஸ்டீவ் ஸ்மித் 69, ஆர்க்கர் 27 (8 பந்துகளில்) விளாசித்தள்ளியாதால் 216 ரன்களாக ஸ்கோர் உயர்ந்தது. அடுத்து ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 200 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்ததால், 16 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் சூப்பரான வெற்றி பெற்றது. ராஜஸ்தான் பவுலிங்கில் ராகுல் திவெட்டியா 3, ஆர்க்கர் 1, ஷ்ரேயாஸ் கோபால் 1 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

ராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா? ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா! #IPL #RRvsKKR

இரண்டாம் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப்போடு மோதியது ராஜஸ்தான். மயங்க் அகர்வால் – கே.எல்.ராகுல் ஜோடியின் அபாரமான ஆட்டத்தால் 223  எனும் இமாலய வெற்றி இலக்கு ராஜஸ்தானுக்கு அளிக்கப்பட்டது.

சஞ்சு சாம்சன் 42 பந்துகளில் 85, ராகுல் திவெட்டியா 31 பந்துகளில் 53, கேப்டன் ஸ்மித் 27 பந்துகளில் 50 ரன்கள் என அதிரடியாக ஆடி 226 ரன்களைக் குவித்து வரலாற்று வெற்றியைப் பெற்றனர். ஆம், அதிக ரன்களை சேஸிங் செய்த ஐபிஎல் போட்டி இதுவே. வென்றது ராஜஸ்தான் அணியே.

ராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா? ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா! #IPL #RRvsKKR

இந்த வெற்றிக்கு முக்கியமான காரணம் ராகுல் திவெட்டியா. அன்றைய போட்டியில் 17 வது ஓவரில் 5 சிக்ஸர்கள் பறக்க விட்டார். அவை இல்லையெனில் நிச்சயம் வெற்றி பஞ்சாப் அணிக்கே சென்றிருக்கும். ராஜஸ்தான் பவுலிங்கில் அங்கிட், டாம் கர்ன் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா? ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா! #IPL #RRvsKKR

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் முதல் போட்டி பலம் வாய்ந்த மும்பை இண்டியன்ஸ் அணியோடு. சிஎஸ்கேவிடம் தோற்றுவிட்டு வந்திருந்த மும்பை, கொல்கத்தாவின் பந்துவீச்சை விளாசித் தள்ளியது. ரோஹித் ஷர்மா 80, சூர்யகுமார் யாதவ் 47, திவாரி 21 ரன்கள் என ஸ்கோர் 195 ஆக முடித்தார்கள்.

196 எனும் பெரிய ஸ்கோரை எதிர்கொண்ட கொல்கத்தா 20 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்களை மட்டுமே எடுத்தது. கிம்மின்ஸ் 33, தினேஷ் கார்த்திக் 30, ரானா 24 ரன்கள் எடுத்தனர். கொல்கத்தா பவுலிங் தரப்பில் ஷிவம் மாவி 2 விக்கெட்டுகளையும் ரஸலும், சுனில் நரேனும் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

ராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா? ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா! #IPL #RRvsKKR

இன்றைய போட்டியில் இரு அணிகளும் மோதும்போது ஆட்டம் எப்படி இருக்கும்?

ராஜஸ்தான் அணியில் பேட்டிங் ரொம்பவே ஸ்ட்ராங்கா இருக்கிறது. ராகுல் திவெட்டியா போல எதிர்பாராத வீரர்கள்கூட அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்கிறார்கள். சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், உத்தப்பா, ஆர்க்கர், டாம் கரண் எனப் பட்டியல் நீளம், அது மிகப் பெரிய பலம். ஆனால், பவுலிஙில் கொல்கத்தாவோடு ஒப்பிடுகையில் சற்று பலவீனமாகவே இருக்கிறார்கள். திவெட்டியா, டாம் கரண் ஆகியோரையே நம்பியிருக்க வேண்டியுள்ளது.

ராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா? ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா! #IPL #RRvsKKR

கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை, ஓப்பனிங் எந்தப் போட்டியிலும் எடுபடவே இல்லை. பலரும் ஓப்பனிங் வீரராக இறக்கும்படி பரிந்துரைத்த  சுனில் நரேன் தொடர்ந்து சொதப்பியே வருகிறார். கில் ஒரு போட்டியில் தவற விட்டாலும் அடுத்த போட்டியில் சுதாரித்துக்கொண்டார்.

ரானா, தினேஷ் கார்த்தி, மோர்கன், ரஸல் எனும் பேட்டிங் வரிசை நன்றாக இருந்தாலும் ஓப்பனிங் சரியாக இல்லாததால், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களுக்கு சுமை அதிகமாகிறது. அதுவும் செகண்ட் பேட்டிங் எனும்போது ரன்களை சேஸ் செய்ய படாதபாடு படுவார்கள்.

ராகுல் திவெட்டியாவின் சிக்ஸர் மழை இன்றும் இருக்குமா? ராஜஸ்தானோடு மோதும் கொல்கத்தா! #IPL #RRvsKKR

பவுலிங்கைப் பொறுத்தவரை கொல்கத்தாவின் சுனில் நரேன், குல்தீப் யாதவ், ஷிவம் மாவி, ரஸல் என எதிரணியைச் சமாளிக்கும் விதத்தில் இருக்கிறது.

ராஜஸ்தான், கொல்கத்தா இரண்டும் பலமும் பலவீனமும் கலந்தே இருந்தாலும் தொடர்ந்து வெற்றியை ருசித்து வரும் ராஜஸ்தானுக்கு இன்றும் அது தொடரக்கூடும்.