ஐபிஎல் கிரிக்கெட் - இன்றைய போட்டியில் குஜராத்-ராஜஸ்தான் அணிகள் மோதல்!
Apr 9, 2025, 10:02 IST1744173147546

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 22 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு நடைபெற்ற லீக் போட்டியில் ருத்துராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 219 ரன்கள் எடுத்தது. இதனையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 201 ரன்கள் மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள போட்டியில் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டியானது அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. குஜராத் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டிகளில் 3ல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணியை பொறுத்தவரையில் இதுவரை விளையாடியுள்ள 4 போட்டியில் 2ல் வெற்றியும், 2ல் தோல்வியும் அடைந்த புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது.