தோனியின் கேப்டன்சியில் எழுச்சி பெறுமா சென்னை? - கொல்கத்தாவுடன் இன்று மோதல்!

 
csk

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த மார்ச் மாதம் 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 24 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று இரவு நடைபெற்ற 24வது லீக் போட்டியில் அக்‌ஷர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும், ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் பெங்களூருவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி அணி வெற்றி பெற்றது. 
இந்த நிலையில், இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு போட்டி தொடங்குகிறது. சென்னை அணியை பொறுத்தரவரையில் இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.