பெங்களூரு அணியின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்குமா குஜராத்?
Apr 2, 2025, 12:37 IST1743577634322

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
18வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 22ம் தேதி தொடங்கியது. இதுவரை 13 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று 13வது போட்டி நடைபெற்ற நிலையில், லக்னோவில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் ரிஷப் பந்த் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஸ்ரேயஸ் ஐயர் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் லக்னோவை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.
இந்த நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று 14வது லீக் போட்டி நடைபெறவுள்ளது. பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கும் போட்டியில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் பெங்களூர் அணி அசூர பலத்தில் உள்ளது. அந்த அணி இதுவரை விளையாடியுள்ள 2 போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது குறிப்பிடதக்கது.